வவுனியா - போகஸ்வெவ, நந்திமித்ரகம தொல்பொருள் வனப்பகுதியில் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட பெண் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டு களிமண் கைவினைப்பொருட்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துவருகின்றமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா, களுத்தறை, வென்னப்புவ மற்றும் இங்கிரிய பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.