கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பம் தொடர்பில் நிர்ணயிக்கப்பட்ட திகதி குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்.

கல்வியமைச்சர்  டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று காலை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த முடிவு அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக க.பொ.த. உயர்தரப் பரீட்சையினை செப்டெம்பர் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை  நடத்த கல்வியமைச்சு திட்டமிட்டிருந்தது. எனினும் மாணவர்கள் உட்பட பல பிரிவினர் பரீட்சையினை மேலும் ஒத்தி வைக்குமாறு வலியுறத்தியிருந்தனர்.

இந் நிலையில் கல்வி அமைச்சு இது தொடர்பாக பாடசாலை மட்டத்திலும் இணையத்தளமூடாகவும் கருத்துக்களை கோரியிருந்தது.

அதன்படி, இது தொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்.

கல்வியமைச்சு, உயர்தரப் பரீட்சை, டலஸ் அழகப்பெரும