ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 298 இலங்கையர்கள் நாட்டுக்கு இன்று வருகை தந்துள்ளனர். 

இலங்கை எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -226 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாகவே இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இன்று காலை 6.05 மணிக்கு மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்தனர்.  

இவ்வாறு வருகை தந்தவர்களுள் 13 குழந்தைகளும் உள்ளடங்குன்றனர்.

மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் பி.சி.ஆர். ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.