உலக சமுத்திரங்கள் தினம் 2020ஐ கொண்டாடுவதில் Loon Tao and Shore By O! நிறுவனத்தின் கீழ் செயற்படும் Loon Tao, Shore By O! ஆகிய றெஸ்டூறன்டுகள் கல்கிசை கடற்கரை ஓரத்தில் வீசப்படுவதும் அலைகளினால் தள்ளிவிடப்படுவ துமான குப்பைகூழங்களை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டன. கல்கிசையில் மக்களுக்கு பிரமிப்பூட்டும் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இவ்விரு றெஸ்டூ- றன்டுகளும் கரையோரத்தை அழுக்கற்றதாக வைத்திருப்பது தமது பொறுப்பு என்று கருதுகின்றன.

கரையோர சுத்திகரிப்பு பணி Excel Restaurants Ltd இன் பங்களிப்புடனேயே மேற்காள்ளப்பட்டது. சுத்திகரிப்பு  பணியில் Excel Restaurants அணியுடன்  தொண்டர்கள் குழு ஒன்றும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. Excel Restaurants நிறுவனம் சுத்திகரிப்பு பணிக்கு தேவையான உபகரணங்களை பணியாளர்களுக்கு வழங்;குவதோடு பங்குபற்றும் அணியினர் அனைவரினதும்  பாதுகாப்பையும் உறுதிசெய்திருந்தது. காலையில் பணியை ஆரம்பித்த குழுவினர் பெருமளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட கழிவுகள் பொதிகளில் இடப்பட்டு நேரடியாக மாநகரசபை ட்ரக் வண்டிகளில் ஏற்றப்பட்டன.

இலங்கை கரையோரங்கள் பலதரப்பட்டவையாக கவர்ச்சிமிக்க காட்சிகளுடன் 1,700 கிலோமீற்றர் தூரத்திற்கு பரந்து காணப்படுகின்றன. எவ்வாறாயினும், பிரதானமாக மனித நடவடிக்கைகளாலும் ஏற்படும் சமுத்திரக் கழிவுகளே எமது கடலோரங்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. கழிவுப் பொருட்களை கடலினுள் கொண்டு தள்ளுதல் ஒரு உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்து சமுத்திரங்களின் இயல்புத்தன்மையை கெடுத்து வருகிறது. ஐக்கியநாடுகள் சுற்றுச் சூழல் திட்டத்தின் மதிப்பீட்டின்படி சமுத்திரத்தின் ஒவ்வொரு சதுர மைலிலும் 46,000 பிளாஸ்டிக் துண்டுகள் மிதக்கின்றன. கழித்து விடப்படும் பிளாஸ்டிக் துண்டுகள் நுண்-பிளாஸ்டிக்குகளாக உடைந்துபோய் விடுகின்றன. இவை சிறு பிளாஸ்டிக் குண்டுகளாக திரண்டு உலகம் எங்கிலுமுள்ள கடற்கரைகளில் காணப்படுகின்றன. மேலும், வருடம் தோறும் பல லட்சக் கணக்கான கடற்பறவைகளினதும் ஒரு லட்சத்திற்கு மேலான கடற் பாலூட்டிகளினதும் சாவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் ஏதுவாகின்றன. ஒரு நீதிநியாயமான வணிக பங்காளர் என்ற வகையில், சமுத்திரமானது மீட்கமுடியாமல் ஒடுங்கிப்; போவதற்கு முன்னர் அதனை பாதுகாத்து பராமரிப்பது தங்கள் தலையாய பொறுப்பு என்று  Excel Restaurants   நம்புகின்றது.

Browns Hotels, Resorts  குழும பொது முகாமையாளர் திரு. எக்சத் விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: “Loon Tao, Shore By O! ஆகிய இரு றெஸ்டூரண்டுகளும் சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கு அற்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றன. எமது தத்துவத்தின் மூலப் பொருள் நீதிநியாய நடவடிக்கையாகும். இரண்டு றெஸ்டூரண்டுகளுமே கல்கிசை கடலோரத்தில் அமைந்திருப்பதால் கரையோரம் சுத்தமாக இருப்பதையும் எமது கழிவுப் பொருட்கள் உரிய முறையில் அகற்றப்படுவதையும் எப்பொழுதும் உதிப்படுத்திக் கொள்கிறோம். எம்மை பொறுத்த  வரையில் நிலைபேறான கடலுணவு மிக முக்கியமானதாகும். நாம் எமது றெஸ்டூற- ன்டுகளுக்கான சேர்மானங்களை குறிப்பாக கடலுணவுகளை பேண்தகு முறையில் ஒழுக்கநெறிகளை பேணும் விநியோகஸ்தர்களிடமிருந்தே கொள்வனவு செய்கிறோம். இத்தகைய முயற்சிகளின் பேரில்தான் மனிதர்களை ஆபத்திற்குள்ளாக்கும் நிலையை எதிர்கொள்ளும் சமுத்திரத்தை பாதுகாப்பதற்கான எமது பங்களிப்பை மேற்கொண்டு வருகிறோம்”. 

தற்போது ஆறு றெஸ்டூறன்டுகளை Excel Restaurants Ltd. நடத்தி வருகிறது. Loon Tao கடலுணவுகளை அடிப்படையாக கொண்ட சீன முறையிலான உணவுகளை தயாரிப்பதில் விசேடத்துவம் பெற்றுள்ள அதேவேளை IL Cieloகொழும்பின் வனப்பு மிக்க காட்சிகளுக்கு மத்தியில் அதன் கூர்நோக்கான விருந்தினர்கட்கு நம்பகமான இத்தாலிய உணவு வகைகளை தயாரித்தளித்து வருகிறது. வுளiபெ வுயழ இத்தீவகத்தில் சுவைசொட்டும் நம்பகமான சீன உணவு வகைகளை தயாரிப்பதில் சுவைஞர்களை கவர்ந்து வருகிறது. பிரமிப்பூட்டும் சுவைகள் நிறைந்த சிறந்த தேர்வான Tsing Tao மற்றும் கொழும்பில் அதிசிறந்த rooftop pubs,  Berlin Sky Lounge ஆகியவற்றில் பரிமாறப்படும் உணவுவகைகளையும் பான வகைகளையும் அருந்தலாம். Shore By O! பரந்த வகைகளிலான சுவை சொட்டும் உணவுகளையும் அதன் தனித்துவமான படைப்புக்களையும் பரிமாறுகின்றது. கொழும்பின் புகழ்பெற்ற CH & FC கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ள Floor By O!  அனைத்து குடும்பத்தினருக்கும் விருப்பமான மென்பானங்கள், ருசிகர உணவு வகைகள், bands, DJs னுதுள ஆகியவற்றை இனிய சுற்றுச்சூழலில் வழங்குகிறது.

Excel Restaurants Ltd. இன் நிருவாகத்திற்குட்பட்ட Excel World அனைத்து குடும்பத்- தினருக்கும் சௌகரியமான பிரபல்யம்மிக்க பொழுது போக்கு பூங்காவாகதிகழ்கிறது.  Excel World ஆகப்பிந்திய புதிய ஆக்கங்களில் புதிய உணவகங்கள், றெஸ்டூறன்டுகள் ஆகியன அடங்குகின்றன. புதிதாக தரமுயர்த்தப்பட்ட விருந்து மண்டபமும் மகாநாட்டு சாலைகளும் கூட்டாண்மை நிகழ்ச்சிகளுக்கும் பணியின் பின்னரான ஒன்றுகூடல்களுக்கும் தனிப்பட்ட வைபவங்களுக்கும் பொருத்தமானவை ஆகும்.   

Browns Group இற்கு சொந்தமான Excel Restaurants Ltd .  இலங்கையில் மிகப்பெரும் பன்முகப்படுத்தப்பட்ட வணிக நிறுவனங்களில் ஒன்றான LOLC இன் ஒரு பிரிவாகவும் இயங்கி வருகிறது. Browns Groupமின்சார உற்பத்தி, இல்ல-அலுவலக தீவுகள், விவசாய மற்றும் பெருந்தோட்ட உதவி சேவைகள், மருந்து வகைகள், முதலீடுகள், கடல்சார் மற்றும் உற்பத்தி துறைகள், ஓய்வு மற்றும் விருந்தோம்பல் சேவைகள் ஆகிய துரிதவளர்ச்சி அடைந்துவரும் பல்வேறு கைத்தொழில்களை நிருவகித்து வருகிறது.