வவுனியாவில் இன்று அதிகாலை கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் ஈரப்பெரியகுளம் புனாவை எல்லை பகுதியில் தடம் புரண்டதையடுத்து ரயில் பாதை சீரமைப்புப்பணிகள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் இடம்பெற்று பிற்பகல் 2.30 மணியளவில் வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்குதிரும்பியுள்ளது.
இன்று காலை வவனியாவில் இருந்து அதிகாலை கொழும்புக்கு சென்ற கடுகதி ரயில் ஈரப்பெரியகுளம் பளாவை எல்லைப்பகுதியில் ரயில் பாதையைவிட்டு விலகி தடம் புரண்டுள்ளது.
இதையடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை கழற்றிவிட்டு விட்டு ஏனைய பெட்டிகளுடன் ஒரு மணி நேரத்தின் பின்னர் ரயில் கொழும்பு நோக்கி தனது சேவையை மேற்கொண்டது .
இந்நிலையில் தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகள் ரயில் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருந்து இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில்கள் அனைத்தும் வவுனியா ரயில் நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற ரயில்கள் மதவாச்சி ரயில் நிலையில் தரித்து நிறுத்தப்பட்டிருந்து.
எனினும் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு தடம்புரண்ட ரயில் பெட்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டு வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM