முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியலை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

வர்த்தகரொருவரிடம் பலவந்தமாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.