ஓரோமோ இனத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் எத்தியோப்பியாவில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இன வன்முறைகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது.

ஓரோமோ இனத்தைச் சேர்ந்த பொப் பாடகர் 'ஹாகலூ ஹுண்டீசா' எத்தியோப்பியாவில் கடந்த ஜூன் 29 ஆம் திகதி அடையாளம் தெரியாத தாக்குதல்தாரர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இதனால் எத்தியோப்பியாவில் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் இனப் பதற்றங்கள் தற்போது அதிகரித்துள்ளது. 

பிராந்தியத்தின் ஏற்பட்ட இந்த அமைதின்மை காரணமாக ஒன்பது பொலிஸ் அதிகாரிகள், ஐந்து போராளிகள் மற்றும் 215 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக ஓரோமியா பொலிஸ் ஆணையாளர் முஸ்தபா கெதிர் புதன்கிழமை அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

அத்துடன் இந்த வன்முறைகள் காரணமாக அரசு மற்றும் தனியார் துறையினரின் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.