போதைப்பொருள் மோசடி செய்பவர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தைச் சேர்ந்த 12 அதிகாரிகளை எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களை இன்றைய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.