'கொரோனா' வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் மூளையை தின்னும் அமீபா நோய் பாதிப்பொன்று ஏற்பட்டுள்ளது.

மனிதர்கள் உடலில் உள்ள பல அணுக்களில், அமீபா என்பது ஓரணு உயிரி. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நெக்லேரியா பவுலரி என்ற மனித மூளையை தின்னும் அமீபா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மாகாண சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. 

மிதமான வெப்பநிலையில் உள்ள நல்ல நீரில் இந்த கிருமி இருக்கும் என தெரியவந்துள்ளது.

மேற்படிநோய் தொடர்பாக தெரியவருவதாவது, மூக்கின் மூலமாக உடலுக்குள் புகுந்து மூளையை சென்றடையும். இந்த அமீபா மூளையை கொஞ்சம் கொஞ்சமாக தின்னத் ஆரம்பிக்குமாம். ஆனால் இந்த உணர்வு மனிதர்களுக்கு தெரியாது எனவும்,  மிகவும் அபூர்வமான இந்த நோயால் சமீபத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் ஏரி, குளம், நீச்சல், குளம் போன்றவற்றில் குளிக்கும்போது மூக்கின் வழியாக நீர் உள்ளே செல்வதை தவிர்க்கும்படி வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். 

தலைவலி,காய்ச்சல்,வாந்தி,கழுத்து வலி ஆகியவையே இதன் அறிகுறிகளென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்நோய், மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நினைவு இழப்பது, குழப்பங்கள் ஏற்படுவது, வலிப்பு நோய், உடல் கட்டுப்பாட்டை இழப்பது, ஆகியவையும் ஏற்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.