இந்தியன் பிரீமியர் லீக்கை நடத்துவதற்கு பி.சி.சி.ஐ. என அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் நிறுவனம் ஆர்வமாகவுள்ளதாக அதன் தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

எனினும் அதன் ஆரம்பத் திகதி தொடர்பில் இறுதி முடிவொன்று எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோவிட் -19 தொற்று நோயின் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆரம்பமாகவிருந்த ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டது.

இந் நிலையில் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டுள்ள சவுரவ் கங்குலி இந்தியாவில் ஐ.பி.எல். போட்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வது பி.சி.சி.ஐ.யின் முன்னுரிமை எனவும் கூறியுள்ளார்.

இன்று புதன்கிழமை தனது 48 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சவுரவ் கங்குலி, உலகம் முழுவதும் ஒரு பயங்கரமான கட்டமாக இருந்த நிலையில் கிரிக்கெட் இயல்பு நிலைக்கு திரும்புவது முக்கியம் என்றார். 

எவ்வாறாயினும், ஐ.பி.எல் குறித்த எந்தவொரு முடிவையும் சர்வதேச கிரிக்கெட் நிறுவனம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாக திட்டமிடப்பட்டுள்ள இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்துக்கு பிறகு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.