இந்தியன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானத்தின் மூலமாக 153 இந்தியர்கள் இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

அதன்படி இந்தியன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.ஐ -282 என்ற சிறப்பு விமானத்தினூடாக அவர்கள் காலை 9.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து அவர்கள் புதுடில்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். 

இலங்கையில் கட்டுமானம், தச்சர்கள் மற்றும் ஏனைய தொழில்களில் ஈடுபடும் குழுவினரே இவ்வாறு புதுடில்லி நோக்கிப் புறப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை கட்டார், தோஹாவிலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு 23 இலங்கையர்கள் கட்டாரின் கியூ,ஆர் - 668 என்ற விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்தனர்.