பளை, இயக்கச்சி பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 44 வயதுடைய ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேலதிக சிகிக்சைக்காக அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். 

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் உயிரிழந்தவரின் மனைவி உட்பட இருவரை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.