மறைந்த பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த 'தில் பெச்சாரா' என்ற படத்தின் முன்னோட்டம் அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்று உலக சாதனை படைத்திருக்கிறது.

பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் திகதி மும்பையிலுள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் நடிப்பில் கடைசியாக உருவான படம் 'தில் பெச்சாரா'. இந்தப் படம் இம்மாதம் 24ம் திகதியன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் என்ற டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது.

இந்த முன்னோட்டம் வெளியான 24 மணி நேரத்தில் 2.94 கோடி பார்வைகளும், ஆறு மில்லியன் லைக்குகளும் கிடைத்திருக்கின்றன. இதற்குமுன் சாதனையாக கருதப்பட்ட 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' என்ற படத்தின் முன்னோட்ட த்திற்கு 3.6 மில்லியன் லைக்குகள் கிடைத்திருந்தன. இதன் மூலம் உலக அளவில் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசி படமான 'தில் பெச்சாரா' புதிய உலக சாதனை படைத்திருக்கின்றமை முக்கிய அம்சமாகும்.

மேலும், தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தின் முன்னோட்டம், இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்றிருந்தது. அதையும் இந்த 'தில் பெச்சாரா' முறியடித்துள்ளமை குறிப்பிடதக்க விடயமாகும்.