மேற்கு ஆபிரிக்க நாடான புர்க்கினா பாசோவில் உள்ள பொது மயானமொன்றில் 180 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.

புர்க்கினா பாசோவில் வடக்கே உள்ள ஜிபோவில் அமைந்துள்ள மயானமொன்றிலேயே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவர்களது உயிரிழப்புக்கு அரசாங்கப் படையினர் காரணமாக இருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

எனினும் திருடப்பட்ட இராணுவ சீருடைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி ஆயுதக் குழுக்களால் இந்தக் கொலைகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

இருப்பினும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புர்க்கினா பாசோ 2017 முதல் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) உடனான தொடர்புகளில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கு எதிராக போராடி வருகிறது.

இவர்களுடனான மோதல்களின் விளைவாக நூற்றுக் கணக்கான பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் சுமார் ஒரு மில்லியன் பேர்வரை இடம்பெயர்ந்தும் உள்ளனர். இந்த மோதல்கள் அண்டைய நாடான ‍நைஜர் மற்றும் மாலியையும் பாதித்துள்ளது.