எட்டாவது பாராளுமன்றத்தின் வன்னி மாவட்டத்தில் முதல்த்தர பாராளுமன்ற உறுப்பினராக சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த நான்கரை வருடங்களில் தமிழர்களின் நிரந்தர தீர்வு விடயமாகவும் வன்னி மாவட்டத்தில் தமிழர்களின் தனித்துவத்தை அழிப்பதற்கான சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் அதிக நேரம் ஐனாதிபதி,பிரதமர் மற்றும் அமைசர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டமைக்காகவும் அதிகமான நேரம் பாராளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்தி தமிழர்களின் கலை கலாச்சாரத்தை பாதுகாத்ததுடன் மாவட்டங்கள் மற்றும் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் அதிகமாக பாராளுமன்றத்தை பயன்படுத்தியமைக்காகவும் சாள்ஸ் நிர்மலநாதனை கெளரவித்து வன்னி மாவட்டத்தின் முதல்தர பாராளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக வன்னி மக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு நன்றிகளை தெரிவித்தன.