ஆண்கள் இருவரின் சடலங்கள் இன்று காலை, கங்கையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

பெல்மடுல்ல - தெனவக கங்கையிலிருந்தே மேற்படி இரண்டு ஆண்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு, மீட்கப்பட்ட சடலங்களில் பலத்த காயங்கள் காணப்படுவதாகவும், குறித்த ஆண்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.