(ஆர்.யசி)
தமிழ் மக்களை நோக்கிய ஆபத்தான அரசியல் சூழலொன்று உருவாகி வருகின்றது. எம்மை நோக்கிய பெளத்த, இராணுவ ஆக்கிரமிப்புகள் படையெடுத்து வருகின்றது. இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைபின் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாட்டும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம். நாளாந்தம் புத்தம் புதிய காவலரண்கள் வருகிறது. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம் . முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழ்கின்ற சூழல் எங்களை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக பயணிக்க வேண்டிய நேரம் அவ்வாறு ஒன்றாக பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும். இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம்.
நாங்களாக எங்கள் மண்ணில் இறந்துபோன இறமைகளை மீட்டு எடுத்து நிமிர்ந்து வாழப்போகின்றோம் என்கின்ற சூழல் எங்களுக்கு எப்போது வரப் போகிறது. நான் கூட இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன், என்னால் முடிந்த பணிகளை இந்த மண்ணிற்கு ஆற்றியிருக்கிறேன். மீண்டும் உங்கள் பேராதரவினை நாடி நிற்கின்றோம் என தெரிவித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM