கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நாட்டின் பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை ரயில்வே திணைக்களம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி கல்கிஸையிலிருந்து கொழும்பு, கோட்டை முதல் காங்கேசரன்துறை வரையிலான இலக்கம் 4022 ரயில், அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு ஜூலை 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் பிற்பகல் 1:15 மணிக்கு காங்கேசந்துரையில் இருந்து பிற்பகல் 1:15 மணிக்கு கல்கிஸை நோக்கி புறப்படும்.

இதற்கிடையில் கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளை செல்லும் இலக்கம் 1001 ரயில் ஜூலை 18,19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் காலை 6.45 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும்.

அந்த ரயில் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.