நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக நால்வர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,081 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நான்கு கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கடற்படை வீரரரும், எத்தியோப்பியா மற்றும் சவுதிய அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இருவரும் மற்றும் மேலும் ஒருவர் வெலிகடை சிறைச்சாலை கைதியும் ஆவார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் மொத்தமாக 11 ஆக காணப்படுவதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,955 ஆக பதிவாகியுள்ளது.

இந் நிலையில் 115 கொரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் 35 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களில் 788 பேர் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என்பதுடன், 905 பேர் கடற்படை வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.