(எம்.எப்.எம்.பஸீர்)

 கொழும்பு - கோட்டை, காலி முகத்திடலில் ரஷ்ய நாட்டு யுவதி ஒருவரை பலையல் இம்சைகளுக்கு உட்படுத்தி அவரது  இலங்கை நண்பரை தாக்கியதாக கூறபப்டும் சம்பவம் தொடர்பில் 5 இளஞர்கள் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஐவரும் இன்று கோட்டை பொலிஸாரால், கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை அடையாள அணிவகுப்புக்கு  எதிர்வரும் வெள்ளியன்று உட்படுத்தவும் உத்தரவிட்ட நீதிவான், அதற்காக அவர்களை அன்றைய தினம் ஆஜர் செய்ய சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தர்விட்டார்.

 கடந்த 5 ஆம் திகதி ஞாயிறன்று இரவு 11 மனியளவில், காலி முகத்திடலுக்கு ரஷ்ய யுவதியும் அவரது இலங்கை நன்பர்களும் சென்றுள்ளனர். இதன்போதே குறித்த தாக்குதல், பாலியல் இம்சை இடம்பெற்றதாக கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய,  குறித்த ரஷ்ய யுவதி தனது தொலைபேசியில் பதிவு செய்த வீடியோ ஆதாரத்தை மையப்படுத்தி பொலிசார் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் கொழும்பு 2 கொம்பனித் தெரு பகுதியைச் சேர்ந்தவர்களாவர். மேலும் சிலரைத் தேடி வருவதாக பொலிஸார்  கூறுகின்றனர்.

 இந் நிலையிலேயே நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் கோட்டை நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டனர். அதன்போதே அவர்களை விளக்கமரியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.