(எம்.மனோசித்ரா)

எந்தவொரு அரசாங்க அல்லது மாகாணசபை அலுவலகத்தில், அரச பாடசாலையில், உள்ளுர் அதிகார சபைகளில் வேறு அரச கூட்டுத் தாபனங்களில் , நிதியச்சட்ட சபைகள் வசமுள்ள நிறுவனமொன்றில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பாக பிரசாரம் முன்னெடுத்தல் துண்டு பிரசுரங்களை பகிர்ந்தளித்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறான பிரசாரஙகளை முன்னெடுப்பது சட்ட விரோத செயல் என்பதோடு இவற்றுக்கு வாய்ப்பளிக்காமலிருப்பது குறித்த அலுவலகங்கள் அல்லது நிறுவனங்களின் தலைவர்களது பொறுப்பாகும்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அறிவித்தலை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.