நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 24 மணித்தியாலத்திற்குள் 1747 பேர் கைது!  

07 Jul, 2020 | 11:27 PM
image

(செ.தேன்மொழி)

திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

இதற்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று  திங்கட்கிழமை நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது , சட்டவிரோத ஆயுதங்கள் , போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும் , பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய  1747 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 440 சந்தேக நபர்களுள் 252 சந்தேக நபர்கள்  ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 565  கிராம் 303 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா போதைப் பொருளுடன் 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 58 கிலோ 26 கிராம் 399 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவரிடமிருந்து  7 கிராம் 760மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 304 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 3982 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து  ரிபீடர் ரக துப்பாக்கி ஒன்றும் , குழல் 12 ரக துப்பாக்கி மூன்றும் ,தன்னியக்க தோட்டாக்கள் ஆறும் மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 310 சந்தேக நபர்களும், வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்த 689 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு இணங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று  நள்ளிரவு வரை 1747 சந்தேக நபர்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58