ஹெரோயினுடன் கைதான ஐவருக்கு விளக்கமறியல்!

07 Jul, 2020 | 09:25 PM
image

ஹெரோயின் போதைப்பொருளை  தம்வசம் வைத்திருந்த  ஐவரை எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  அக்கரைப்பற்று  நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகம் மற்றும் பாவனை  தொடர்பாக   அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரனிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் தொடர்பில் அவரது   வழிகாட்டலில்  சென்ற கல்முனை, அம்பாறை மதுவரி நிலைய பொறுப்பதிகாரிகள் தலைமையிலான  குழுவினர் இணைந்து   நேற்று திங்கட்கிழமை(6)  மாலை கல்முனை பிராந்தியத்திற்கு உட்பட்ட   அட்டாளைச்சேனை பகுதியில் திடீர் தேடுதலை மேற்கொண்டு ஐவரை கைது செய்ததுடன் அவர்களின் வசம் இருந்த ஹெரோயின் போதைப்பொருட்களையும் மீட்டுள்ளது.

இதன் பின்னர் கைதான 5 சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இரவு  ஆஜர்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் ஜுலை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். குறித்த தேடுதல் நடவடிக்கையில்   கைதானவர்கள் அனைவரும் 25, 22 ,33 ,29 ,27 வயதினை உடையவர்களாவர்.

இதில் அட்டாளைச்சேனை பகுதிக்கு அம்பாறை பரகாகல பகுதியில் இருந்து இருவர் ஹெரோயினை விற்பதற்கு வருகை தந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர்களுடன் தொடர்புள்ளவர்கள் சம்பந்தமாக அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் தலைமையில் புலனாய்வு விசாரணை முன்னெடுக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21