கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பருத்தி துணியிலான முக கவசங்ளை அணிவதற்கே பலர் தடுமாறும் நிலையில், மராட்டிய மாநிலம், புனே சிஞ்ச்வாடை சேர்ந்த சங்கர் என்பவர், 2 லட்சத்து 90 ஆயிரம் இந்திய மதிப்பில் தங்கத்தில் முக கவசம் செய்து அதை அணிந்தமை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா இதுகுறித்து தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் “உங்களிடம் அறிவை விட அதிகமாக பணம் இருக்கிறது. அதனால்தான் இப்படி செய்கிறீர்கள்” என சாடி உள்ளார். 

எனினும் இந்த தங்க முக கவசம், கொரோனா தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.