பலநாள் மீன்பிடிக் கலன்களில் களஞ்சியப்படுத்தப்படும் கடலுணவு வகைகளை பழுதடையாது தவிர்க்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நாளைய தினம்  நடைபெறவுள்ளது. 

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாரா நிறுவனம், கடற்றொழில் திணைக்களம்  மற்றும் நர்ட் நிறுவனம் ஆகியன ஒப்பமிடவுள்ளன.

நாளை 8 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் பந்துல குணவர்த்தன அகியோரது முன்னிலையில் நடைபெறவுள்ளது. 

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நாள  மாலை 3.30 மணிக்கு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.