எதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..!

Published By: J.G.Stephan

07 Jul, 2020 | 05:19 PM
image

மக்களிடத்தில் மாற்றம் வேண்டும் . மாற்றம் வந்தால் தான்  தமிழ் மக்களுக்கு  தீர்வு கிடைக்கும் அல்லது நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறிய கூட்டமைப்பு ஒரு போதும் இந்த இருபது வருடங்களுக்குள் தங்களுக்குள் ஒரு சரியான மாற்றத்தைக் கொண்டு வந்தார்களா? என வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான வைத்தியர் ஞானசீலன் குணசீலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சந்தர்ப்பமே கொடுக்கப்படாமல்  சுமார்  20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களும் சாதிக்க மாட்டார்கள் என்று கூறுவது ஒரு நகைப்புக்குறிய விடயமாக  இருக்கின்றது என்றார். 

உண்மையிலே கூட்டமைப்பு என்று ஒன்று இல்லை. தமிழரசுக் கட்சி தான் இருக்கின்றது. கூட்டமைப்பு என்கின்ற கட்சியை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட அந்த கட்சியை பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும் தமிழரசுக்கட்சியினால் முறியடிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார். 

இந்நிலையில், மக்கள் கட்டாயமாக இன்னொரு சந்தர்ப்பத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். எங்களுக்கு சாதிக்கக்கூடிய வகைகளில் அதிகாரத்தை பெற்று தர மக்கள் முன்வர வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11