தற்போதைய அரசியல் கள நிலவரங்களையும் தமிழர்சார் அரசின் கொள்கைகளையும் ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிப்பது காலத்தின் தேவையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகளும் 22 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
5 உறுப்பினர்களுக்காக 304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் இவர்களில் சில கட்சிகளினூடாக பல தழிழர்கள் போட்டியிடுகின்றனர்
ஆனால் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களைத் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அது தமிழ் மக்களுக்குச் செய்யும் ஒரு துரோகமாகத்தான் கருதப்படும்.
த.தே.கூட்டமைப்பு தவிர்ந்த கட்சிகள் சில பல மாயையான தோற்றப்பாடுகளை நம் இளைஞர்கள் மத்தியில் தோற்றுவித்து அவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் இந்த ஏமாற்று வித்தைகளை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த உதிரிக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் அளிக்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் பல கட்சிகளுக்கு பிரிவதனால் அவர்களை உறுப்பினர்களாக தெரிவு செய்வதனை விடுத்து அச் செயற்பாடானது அரசின் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அடக்கு முறைகளுக்கு உறுதுணை அளிப்பவைகளுமாவேதான் அமையும் இதனை தமிழ் வாக்காளப் பெருமக்கள் அறிந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
எமது வேட்பாளர்களும் புத்திஜீவிகளும் பல முறை கூறியதனைப் போன்று த.தே.கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளுமே பேரினவாத அரசின் ஆசீர்வாதத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடையின்றி செயற்படுத்துவதற்கான ஆணையினை பெறுவதற்காக களமிறக்கப்பட்ட கட்சிகளாகும்
இக் கட்சிகளின் தலைவர்களான அவர்கள் மொட்டுக் கட்சியுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாக பலமுறை ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்கள்.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற இளைஞர்கள் பொதுமக்கள் பத்திஜீவிகள் அரசியல்வாதிகள் ஆகியோரை மொட்டுக் கட்சி தலைவர்களின் வேண்டுதலுக்காக அவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்காக படுகொலை செய்தவர்கள் இப்போது மட்டுமென்ன தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காகவா ஒப்பந்தம் செய்திருப்பார்கள்.
மாறாக எஞ்சி இருக்கின்ற தமிழ் தேசிய வாதிகளையும் எமது கட்சியான த.தே.கூட்டமைப்பினையும் இல்லாமல் செய்வதற்கும் தமிழர் தாயக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நாடு பூராகவும் மேலோங்கச் செய்வதற்காகவுமே இவர்கள் ஒப்பந்தம் செய்திருப்பார்கள்.
எனவே எமது ஆணையினைக் கொண்டு எம்மையே அழிப்பதற்கான கபட நாடகத்தினை தற்போதைய பேரினவாத அரசு மேற்கொண்டுள்ளது இதற்காக மூன்றாம்நிலை கடைக்கோடி உதிரிக் கட்சிகளான தங்களின் எடுபிடிகளை இதற்காக அரசு பயன்படுத்தியுள்ளதானது எமது விரலைக் கொண்டு எமது கண்ணையே குத்துகின்ற செயற்பாட்டினை இந்த அரசு மேற்கொள்வதனைப் பார்த்தால் சில முட்டாள்களைக் கொண்டு எமது மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற எண்ணம் இந்த அரச தலைவர்களிடம் இன்னுமே மாறவில்லை என்பதனையே இது காட்டுகின்றது” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM