சீனாவில் இன்றைய தினம் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி, அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தென் மேற்கு சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் உள்ள அன்ஷுன் நரில் உள்ள ஹாங்ஷான் நீர்த்தேக்கத்திலேயே குறித்த பஸ் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 18 பேரும் மீட்க்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் இருவர் உயிரிழந்தும் உள்ளனர்.

மீட்புப் படையினரால் விபத்துக்குள்ளான பஸ்ஸும் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை சீனாவின் தேசிய கல்லூரி நுழைவுத் தேர்வு தொடங்கியதால் பஸ்ஸில் அதிகளவான மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் வெளியாகவில்லை.