ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் "பிரண்ட்ஷிப் " படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதிஷ் , JSK சதீஷ்குமார், வெங்கட் சுபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவராக நடிக்கும் ஹர்பஜன் தீவிர ரஜினிகாந்த் ரசிகர். தற்போது இப்படத்தின் " சூப்பர் ஸ்டார் எந்தம்(Superstar anthem)" என்ற முதல் பாடலை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் DM உதயகுமார் இசையமைத்துள்ளார் .

சிம்பு தொலைபேசியில்  ஹர்பஜனுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . மேலும் பாடல் சிறப்பாக உருவாகியிருக்கிறது. திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என வாழ்த்தியுள்ளார். இதற்கு பதிலளித்த ஹர்பஜன் " எனக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பனாக கிடைத்துள்ளீர்கள் . சென்னையில் நாம் இருவரும் விரைவில் சிந்திப்போம்"என கூறியுள்ளார்.

பிரண்ட்ஷிப் திரைப்படம்  இந்திய மொழிகளில் விரைவில்  வெளியாக இருக்கிறது .

தொழிநுட்பக்குழு :

இயக்கம் - ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா

தயாரிப்பு - ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா

இணைத்தயாரிப்பு - வேல்முருகன்

ஒளிப்பதிவு - சாந்த குமார்

இசை - DM உதயகுமார்

படத்தொகுப்பு - தீபக் S தவாரக்நாத்

கலை இயக்கம் - மஹேந்திரன்

வசனம் - PS ராஜ்

சவுண்ட் டிசைன் - ஆனந்த் ( 4Frames )

நடனம் - ஷாம் சூர்யா

ஆடை வடிவமைப்பு - வசந்த்

ஸ்டில்ஸ்- சிவா

நிர்வாக தயாரிப்பு - ரோபின்

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்