கெஸ்பேவவில் ஹோட்டல் வளாகத்தில் ஹோட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹோட்டல் உரிமையாளரின் மனைவி காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெஸ்பேவாவின் குருகம்மன வீதியில் வசிக்கும் 50 வயதான ஹோட்டல் உரிமையாளர், தலையில் காயங்களுடன் படுக்கையில் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

உயிரிழந்த ஹோட்டல் உரிமையாளர் தலையில் கடுமையான முறையில் தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக இருவரை யாரும் கைது செய்யப்படவில்லை.