இயக்குனர் ஜி .என் .ஆர். குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் 'சினம் 'படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

'மாஃபியா படத்தைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சினம்'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். திரைக்கதை எழுதி ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கி வரும் இந்தப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இதில் அருண் விஜய் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

'பாக்ஸர் 'படத்தில் நடித்துவந்த அருண்விஜய், அப்படத்தின் வில்லனாக தயாரிப்பாளர் மதியழகன் ஒப்பந்தம் செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்தார். இதனால் தன்னுடைய தந்தையும் மூத்த நடிகருமான விஜயகுமார் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்டு, ஓராண்டு காலமாக கிடப்பில் போடப்பட்ட' சினம் 'படத்தின் படப்பிடிப்புகளில் பங்குபற்றுவதற்காக தயாராகி வருகிறார். அத்துடன் இப்படம் தொடர்பான பணிகளில் தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அருண் விஜய் என்பதுவும் குறிப்பிடதக்கது.