பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் எனக்கு தெளிவுபடுத்தினார். அதற்கேற்பவே எனது செயற்பாடுகளும் தொடரும். நான் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உங்களது ஒத்துழைப்பினை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருக்கிறார். 

  மத்திய வங்கியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் உத்தியோகஸ்தர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

இந்த விடயம் தொடர்பில் நான் எமது தலைவர்களுடன் உரையாடியிருக்கின்றேன். மத்திய வங்கியானது அதன் செயற்பாடுளில் சுயாதீனமான முறையில் செயற்படும். மத்திய வங்கிக்கு பாரிய பொறுப்புகள் காணப்படுகின்றன.  கொள்கைகள்  நிறுத்தப்பட்டு பின்னர் ஆரம்பிக்கப்படுவது தொடர்பான செயற்பாடுகளிலிருந்து வெ ளியே வரவேண்டும். மத்திய வங்கியை நம்பியே நாட்டின் பொருளாதாரம் தங்கியிருக்கின்றது. எனவே அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாம் செயற்பட வேண்டும். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் எனக்கு தெ ளிவுபடுத்தினார். அதற்கேற்பவே எனது செயற்பாடுகளும் தொடரும். நான் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உங்களது ஒத்துழைப்பினை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.