Published by T. Saranya on 2020-07-07 11:13:42
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்மூலம், கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 888 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 904 கடற்படையினரில் 16 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்றினால் மொத்தமாக 2,078 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,917 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.