வெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில்  ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில்  ஜாசிங்க தெரிவிக்கையில், குறித்த சிறைக்கைது கந்தக்காட்டிலுள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர் என தெரிவித்துள்ளார்.

மேலும், தொற்றுக்குள்ளான நிலையில் இனங்காணப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.