திருமலையில் வயோதிபப் பெண் கஞ்சாவுடன்  கைது

Published By: Digital Desk 4

07 Jul, 2020 | 09:27 AM
image

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணொருவரை 200 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்றிரவு(6) கைது செய்துள்ளதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கோவில் கிராமம், கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சிறைச்சாலையில் எட்டு மாதம் சிறைவாசம் அனுபவித்து விட்டு வெளியில் வந்த நிலையில் மீண்டும் கஞ்சா போதைப்பொருள் விற்ற நிலையிலேயே அவர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் 200 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து குறித்த சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18
news-image

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்...

2026-07-16 16:18:53
news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36
news-image

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

2026-07-16 14:45:43
news-image

புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

2026-07-16 14:01:41
news-image

யோஷித ராஜபக்‌ஷ, பாட்டி டெய்ஸிக்கு எதிரான...

2026-07-16 13:31:21
news-image

உயர்தர பரீட்சையை பிற்போடுவது தொடர்பான மனு...

2026-07-16 13:17:48
news-image

சுற்றாடல் அமைச்சு, ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்...

2026-07-16 13:03:33