காலிமுகத்திடலில் வெளிநாட்டுப் பெண் ஒருவரை துன்புறுத்திய குற்றச்சாட்டில் 5 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சந்தேக நபர் ஒருவரும் சம்பவத்துடன் தொடர்புடைய  நால்வரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

காலிமுகத்திடலில் நேற்று ஞாயிறு, மாலை வேளை ரஸ்ய நாட்டு பெண் ஒருவர் தமது மூன்று நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, 10 உள்நாட்டு பிரஜைகளால் அவர் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவில், மது போதையில் இருந்த  நபர் ஒருவர் குறித்த பெண்ணை ஆபாசமான வார்த்தைகளில் பேசியதுடன் தடுக்க முயன்ற அவரின் நண்பரையும் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ய முயன்றதையடுத்து குறித்த குழுவினர் அங்கிருந்து தப்பியுள்ளனர். எனினும் இவ்வாறு  அவர் துன்புறத்தப்படும்  காணொளியை குறித்த பெண் தமது முகபுத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் 20 நிமிடங்களின் பின் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸாரிடம் குறித்த பெண்  முறைபாடு செய்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுற்றுலாத்துறை பொலிஸார் மேலதீக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.