தரமற்ற பொலிதீன் வகைகளை பயன்படுத்துபவர்களை அடையாளம் காணும் சோதனைகள் ஜூலை மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த பூட்டல் நடவடிக்கைகள் காரணமாக குறித்த சோதனை நடவடிக்கைகளானது நிறுத்தப்பட்டிருந்தது. 

இந் நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் கடந்த வாரத்தில் ஒரு சீரற்ற பரிசோதனையில், தரமற்ற பொலித்தீன் மற்றும் lunch sheets சமூகத்தில் பயன்பாட்டில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படியே, ஜூலை மாதத்தில் தொடர் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.