பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக  தேசிய தேர்தல்கள்  ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெற இருப்பதால், வாக்காளர்களின் வசதி கருதி வாக்களிப்பு நேரம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

 இதே வேளை, 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும்  ஆகஸ்ட் மாதம் 5ஆம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.