ஒஸ்கார் விருது வென்ற புகழ் பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிகோன் தனது 91 வயதில் உயிரிழந்துள்ளதாக அவரது சட்டத்தரணி திங்களன்று உறுதிப்படுத்தினார்.

ரோம் வைத்தியசாலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தாக அவரது சட்டத்தரணி ஜார்ஜியோ அசும்மா தெரிவித்தார்.

மோரிகோன் "The Good, the Bad and the Ugly" and "Once Upon a Time in the West." ஆகிய திரைப்படங்களுக்கு இவர் இசை அமைத்ததன் மூலம் இவர் சர்வதேச அளவில் பிரபல்யமானார்.

மோரிகோன் இரண்டு ஒஸ்கார் விருதுகளையும், கோல்டன் குளோப்ஸ், கிராமிஸ் மற்றும் பாஃப்டா உள்ளிட்ட பல விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.