விபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில் காட்சிப்படுத்திய நண்பர்கள் 

Published By: Digital Desk 4

06 Jul, 2020 | 04:23 PM
image

 பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் பாடசாலைக்காலத்தில் பல்துறைகளிலும் சாதித்த நினைவுச்சின்னங்களை மரணச் சடங்கில் நண்பர்கள் காட்சிப்படுத்திய நெகிழ்ச்சிகரமான சம்பவம் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக தென்னிலங்கை நோக்கிப் பயணித்த மொறட்டுவப் பல்கலைக்கழக இறுதி வருட மாணவன் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மொறட்டுவப் பல்கலைக்கழக இறுதி வருட மாணவன் மோகன் ஆகாஷ் என்பவரே உயிரிழந்தார் .மாணவன், நண்பர்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தென்னிலங்கை நோக்கிப் பயணித்த போது, டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் ஆவார். கல்லூரியின் 13, 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளின் தலைவராகப் பதவிவகித்தவர். அத்துடன் மேசைப்பந்தாட்டத்தில் (Table Tennis) தேசிய மட்டத்தில் சாதித்தவராவார். ஆகாஷின் தந்தை மோகன், யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். இம்மாணவனின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38