கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் கலரிக்குள் செல்வதற்கு  இன்று (06.07.2020) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று முதல் பயணி ஒருவர், ஐவரை பார்வையாளர்கள் கலரிக்குள் அழைத்து வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரொனா வைரஸ் தொற்று  பரவல் காரணமாக பார்வையாளர் கலரி மூன்று மாதகாலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.