இந்தியாவின் கிழக்கு லாடாக்கில் பதட்டமான கால்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீனா தனது படைகளை குறைந்தது ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு திரும்பப் பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த இந்த பகுதியிலேயே கடந்த ஜூன் 15 ஆம் திகதி அன்று இந்திய மற்றும் சீன இராணுவத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டிருந்தது.

இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய வீரர்களும், படையை திரும்ப பெற்றதாகவும், இரு தரப்பு படையினருக்கும் இடையே மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.