சுற்றுலா விசாவை பயன்படுத்தி பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பிவந்த நபரொருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

களுத்துறை - தொடாங்கொடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை கட்டார் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ள நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து சுமார் 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவினை சந்தேக நபர் பெற்றுக்கொண்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.