வவுனியா, குருமன்காடு சந்திக்கு அண்மையில் புதிதாக இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தீடீரென்று இன்று காலை குறித்த சோதனைசாவடி இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வீதியால் பயணிக்கும் சில வாகனங்கள் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

சனநடமாட்டம் அதிகமுள்ள குருமன்காடு பகுதியில்  இராணுவ சாவடி அமைக்கப்பட்டுள்ளமையால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுத்துள்ளனர்.