மேல் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 110 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் ஒன்பது பெண்கள் உட்பட 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடிகளில் ஈடுபட்டது, ஆவணங்களை மோசடி செய்தல், மற்றவர்களிடையே சட்டப்பூர்வமாக ஒப்பந்தங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 13 நபர்களும் உள்ளடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.