மட்டக்களப்பு– கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் பலியாகியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 05.07.2020 இடம்பெற்ற குறித்த சம்பவத்தில்  ஏறாவூர் கலைமகள் வித்தியாலய வீதிப் பகுதியில் வசிக்கும் ஹமர்தீன் முஹம்மத் றுசைத் (வயது 17) என்ற உயர்தர வகுப்பு மாணவனே விபத்தில் பலியாகியுள்ளார்.

இவர் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் உயர்தர தொழினுட்பப் பிரிவில் கற்றுக்கொண்டிருப்பவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மோட்டார் சைக்கிளில் கொழும்பு –மட்டக்களப்பு நெடுஞ்சாலையைக் கடக்கும்போது வாகனமொன்றினால் மோதுண்டதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உடற்க்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.