கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆபிரிக்க கண்டத்தின் பல நாடுகளில் சிக்கித் தவித்த 230 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

எத்தியோப்பியாவிலிருந்து ஒரு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யுஎல் -1710 என்ற ஒரு சிறப்பு விமானத்தினூடாக அவர்கள் இன்று அதிகாலை 3.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் பின்னர் பி.சி.ஆர். சோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ள்ளனர்.