பார்முலா -1 கார்ப்பந்தயம் : உலக சம்பியன் ஹமில்டனுக்கு ஏமாற்றம் ; பின்லாந்து வீரர் வெற்றி 

06 Jul, 2020 | 08:00 AM
image

கொரோனா அச்சத்தால் கடந்த 3 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்த ஆண்டுக்கான பார்முலா - 1 கார்ப்பந்தயம் நேற்று ஆரம்பமாகியது.

 இந்த சீசனுக்கான முதல் பந்தயமான ஆஸ்திரியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் நேற்று இடம்பெற்றது.

ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் அரங்கேறிய இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் கார்ப் பந்தயத்தில் பங்கேற்றனர்.

முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட மெர்சிடஸ் அணி வீரர் வோல்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 306.452 கிலோமீற்றர் இலக்கை ஒரு மணி 30 நிமிடம் 55.739 செக்கன்களில் கடந்து வெற்றி பெற்றார். 

அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. அவரை விட 2.7 வினாடி மட்டுமே பின்தங்கிய பெராரி அணியைச் சேர்ந்த சார்லஸ் லெக்லெர்க் (மொனாக்கோ) 2 ஆவதாகவும், லான்டோ நோரிஸ் (இங்கிலாந்து) 3 ஆவதாகவும் வந்தனர்.

எதிர்பார்க்கப்பட்ட 6 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹமில்டன் 2ஆவது இடத்தை பிடித்தார். 

ஆனால் அவரது கார் ரெட்புல் அணி வீரர் அலெக்ஸ் அல்பானின் கார் மீது மோதியதால் 5 வினாடி பெனால்டி விதிக்கப்பட்டது. இதனால் ஹமில்டன் 4 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு ஏமாற்றத்திற்கு உள்ளார். அடுத்த சற்று போட்டியும் இதே இடத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதிஇடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58