நாடளாவிய ரீதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ரஷ்யாவை முந்திய இந்தியா கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது மோசமான நாடாக இடம்பெற்றது.

உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேக பரவியுள்ளது.

இந்நிலையில், நேற்று தொடர்ந்து 3 ஆவது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. அங்கு நேற்று மாத்திரம் 23,932 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பாதிப்பை கொண்டுள்ளன.

இந்தியாவில் நேற்று வரை மொத்தம் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 6 இலட்சத்து 97 ஆயிரத்து 836 ஆக உள்ளது.

இதன்மூலம், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தரவுகள் படி, கொரோனாவின் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யாவை இந்தியா முந்தியுள்ளது. 

ரஷ்யாவில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 6 இலட்சத்து 81 ஆயிரத்து 251 ஆகும். இந்தியா தற்போது கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.