அமெரிக்காவின் தென் கரோலினாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென் கரோலினாவின் கிரீன்வில்லில் உள்ள இரவு விடுதியொன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை புலனாய்வு அதிகாரிகள் தேடி வருவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் அனைவரும் கிரீன்வில் மெமோரியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை சனிக்கிழமை அதிகாலை, லாவிஷ் லவுஞ்சிற்கு அடுத்தபடியாக இருக்கும் டோல்ஸ் கிளப்பில் இடம்பெற்ற மேலும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு பாதுகாப்பு காவலர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.